வங்காள விரிகுடா கடற்பகுதியில் முரசு புயல் உருவாகியுள்ளதால், வடக்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறிய படகுகள் மறுஅறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
கற்பிட்டியிலிருந்து மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பகுதிகளில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது கடலில் உள்ள சிறிய படகுகள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கோ அல்லது கரைக்கோ திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
ஏனைய பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும் கடல் நிலைமைகளை அவதானித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், உயிர் காக்கும் அங்கிகளை கட்டாயம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வளிமண்டலவியல் மற்றும் கடற்றொழில் திணைக்களங்களின் வானிலை அறிவித்தல்களை தொடர்ச்சியாக அவதானிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது










