ஜோர்தானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜி. எம். வி. விஸ்வநாத் அபோன்சு அம்மான் நகரில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் தனது உத்தியோகபூர்வ கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
ஜோர்தானை வந்தடைந்த புதிய தூதுவருக்கு விமான நிலையத்தில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் அம்மான் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் வரவேற்பளித்துள்ளனர்.










