நியாயமான காரணமின்றி பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளரும் பணிக்குழுத் தலைவருமான சட்டத்தரணி சமிந்த குலரத்னவின் பணி இடைநிறுத்தப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, நாளை செவ்வாய்க்கிழமை (03) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த மனு இன்று (02) திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், நீதிபதிகளான ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் மேலதிக சமர்ப்பிப்புகளுக்காக, மனுவை நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










