அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் இரு தரப்பினருக்கு இடையில் சற்று முன் மோதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் வருகை தந்ததைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.










