2027ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த முன்மொழிவுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்த வரவு செலவுத் திட்டம் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஜனாதிபதி 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளார்.










