அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, இன்று வியாழக்கிழமை வர்த்தக வங்கிகளில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் பெரும்பாலும் மாற்றமின்றி காணப்படுகின்றது.
இதற்கமைய, செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.10 ரூபாவாகவும், விற்பனை விலை 337.35 ரூபாவாகவும் மாற்றமின்றிக் காணப்படுகின்றது.
NDB வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 327.80 ரூபாவாகவும், விற்பனை விலை 336.80 ரூபாவாகவும் நிலவுகின்றது.
மக்கள் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 328.20 ரூபாவிலிருந்து 328.25 ரூபாவாகவும், விற்பனை விலை 336.34 ரூபாவிலிருந்து 336.39 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 326.33 ரூபாவாகவும், விற்பனை விலை 336.25 ரூபாவாகவும் மாற்றமின்றிக் காணப்படுகின்றது.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.25 ரூபாவாகவும், விற்பனை விலை 336.25 ரூபாவாகவும் மாற்றமின்றிப் பதிவாகியுள்ளது.










