2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : 16 வது சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தென் கொரியா ஒன்றுக்கு இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது.

மேலும்,  நேற்று சுவிட்சர்லாந்து இரண்டுக்கு மூன்று கோல்கள் வித்தியாசத்தில் செர்பியாவை வீழ்த்தியது.

இதற்கிடையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நெதர்லாந்து, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், போலந்து, இங்கிலாந்து, செனகல், ஜப்பான், குரோஷியா, பிரேசில், தென் கொரியா, மொராக்கோ, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் 16-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : 16-வது சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்