உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கேலியன் எம்பாப்பே 2026 ஆம் ஆண்டிற்கான வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
இரண்டு முறை உலகக் கிண்ண தங்கப் பாதணியை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை எம்பாப்பே பெற்றுள்ளதுடன் கால்பந்தாட்ட தொடரின் 8 ஆட்டங்களில் 10 கோல்களை அடித்து முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
கட்டார் உலகக் கிண்ணத்திலும் எம்பாப்பே 8 கோல்கள் அடித்து 2022 ஆம் ஆண்டிற்கான தங்கப் பாதணியை வெற்றிகொண்டார்.
உலகக் கிண்ண வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 22 கோல்களை அடித்துள்ள எம்பாப்பே, லியனல் மெஸ்ஸியை (21 கோல்கள்) பின்னுக்குத் தள்ளி உலகக் கிண்ண தொடரில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடிய ஆர்ஜென்டீனாவின் லியனல் மெஸ்ஸி 8 கோல்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்காம் மற்றும் நோர்வேயின் எர்லிங் ஹாலண்ட் தலா 7 கோல்களையும் அடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது