ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களின் வர்த்தக வகுப்பு (Business Class) பயணிகளுக்கு லேக் ஹவுஸ் பத்திரிகைகளை வழங்கும் நடவடிக்கை ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வர்த்தக வகுப்பு பயணிகளுக்கு தினகரன், தினமின, டெய்லி நியூஸ் (Daily News) ஆகிய பத்திரிகைகள் வழங்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கை மற்றும் வெளிநாட்டு பயணிகள், விமானப் பயணத்தின்போதும் உள்நாட்டு மற்றும் சர்வதேச முக்கிய செய்திகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
லேக் ஹவுஸின் முன்னணி பத்திரிகைகளை சர்வதேச பயணிகளிடமும் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சி, பயணிகளுக்கு பயனுள்ள வாசிப்பு அனுபவத்தை வழங்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










