இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த ஒருவர், ஜன்னல் வழியாக வீசிய பை, எதிர்திசையில் பயணித்த மற்றுமொரு இ.போ.ச பேருந்தின் சாரதி இருக்கைக்கு முன்பக்க கண்ணாடியில் மோதியதில் கண்ணாடி சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட 18,000 ரூபா இழப்பை சம்பந்தப்பட்ட பயணி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டனிலிருந்து பொகவந்தலாவை நோக்கி பயணித்த பேருந்தில், தம்பதியினர் தமது குழந்தையுடன் பயணித்துள்ளனர். இதன்போது குழந்தை பேருந்தினுள் வாந்தியெடுத்த நிலையில், அதனை குழந்தையின் தந்தை பொலித்தீன் பையில் சேகரித்து, நோர்வூட் பகுதியில் வைத்து பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளார்.
அந்தப் பை, எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருந்த மற்றுமொரு இ.போ.ச பேருந்து சாரதி இருக்கைக்கு முன்பக்க கண்ணாடியில் மோதியதில், கண்ணாடி சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இரண்டு பேருந்தின் சாரதிகளும் குறித்த பயணியை அழைத்துக்கொண்டு நோர்வூட் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யச் சென்றுள்ளனர்.
இதன்போது, தனது தவறை ஒப்புக்கொண்ட குறித்த பயணி, பின்னர் டிப்போவுக்கு வந்து 18,000 ரூபா அபராதம் செலுத்தி சம்பவத்தை சமரசமாக முடித்துக்கொண்டதாக தெரிய வருகின்றது.










