முள்ளிப்பொத்தானை – கண்டி பிரதான வீதியில் முறையான வடிகான் வசதி இல்லாத காரணத்தால், மழைக்காலங்களில் வெள்ளநீர் வீதியோர மக்களின் வீடுகளுக்குள் புகும் நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக, ஈச்சன் குளத்திலிருந்து வெளியேறும் நீர் செல்லும் பகுதிகளில் போதிய வடிகான் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வடிகான் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், முள்ளிப்பொத்தானை – கண்டி பிரதான வீதியில் தேவையான முக்கிய வடிகான்களை உடனடியாக அடையாளம் கண்டு, முறையான மற்றும் நீடித்த வடிகால் வசதியை ஏற்படுத்தித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
உரிய கவனம் செலுத்தி, முள்ளிப்பொத்தானை மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.










