ஜப்பானில் மனிதர்களை குளிப்பாட்டும் அதி நவீன இயந்திரம் ஜப்பானிய கண்டுப்பிடிப்பொன்று கேட்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது
அதிக வேலைப்பளு அல்லது சோர்வினால் குளிப்பதை பிரச்சினையாக கருதுபவர்களுக்கு ஜப்பானின் இந்த புதிய Human Washing Machine நல்ல தீர்வாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்த இயந்திரம் ஆடைகளை போலவே மனிதர்களையும் 15 நிமிடத்தில் குளிப்பாட்டி உலர்த்திவிடும் என்பது இதன் சிறப்பம்சமாகும். ஜப்பானின் Science Co. நிறுவனம் உருவாக்கியுள்ளது.
மேலும், 1970 ஆம் ஆண்டில் ஜப்பானில் ஒசாகாவில் நடந்த உலக கண்காட்சிக்காக சன்யோ எலெக்ட்ரிக் (Sanyo Electric) நிறுவனத்தால் “அல்ட்ராசோனிக் பாத்” (Ultrasonic Bath) எனப்படும் ஒரு சாதனம் உருவாக்கப்பட்டது. இது ஒரு சலவை இயந்திரம் போல தோற்றமளிக்கும் ஒரு குளியல் தொட்டியாகும். மக்கள் இதற்கு “மனித சலவை இயந்திரம்” என்று செல்லப்பெயர் சூட்டினர் என யறியமுடிகிறது.