சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி மெட்ரோ பேருந்து சேவைகளில் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகப் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் போக்குவரத்து சேவையை வழங்குமாறு லங்கா மெட்ரோ டிரான்சிட் (தனியார்) நிறுவனம் (LMT) முன்னதாகக் கோரப்பட்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கைக்கு அனுமதி வழங்குவதற்கு நிறுவனத்தின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளதாக, லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனத்தின் தலைவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, டிசம்பர் 3ஆம் திகதி மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றிப் பயணிக்க முடியும்.










