2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று திங்கட்கிழமை அன்டிகுவா மற்றும் பார்புடாவைச் சென்றடைந்துள்ளார்.
பிரதமர் அன்டிகுவாவின் வி.சி. பேர்ட் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தபோது, அந்நாட்டின் சுகாதாரம், நலன்புரி, சுற்றுச்சூழல் மற்றும் அரச சேவை விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கல் ஜோசப் அவரை வரவேற்றுள்ளார்.
பொதுநலவாய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தார்.
அன்டிகுவா மற்றும் பார்புடாவின் தலைநகரான செயின்ட் ஜோன்ஸில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின்போது, பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதுடன், உறுப்பு நாடுகளுக்குப் பொதுவான முக்கிய விடயங்கள் தொடர்பான விவாதங்களிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.










