பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பஹ்ரைனில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் விசேட அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
பஹ்ரைன் அதிகாரிகளால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ வழிகாட்டல்கள் மற்றும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும், அறிவுறுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் அந்நாட்டில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களிடமும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், அவசர உதவிகள் தேவைப்படும் இலங்கையர்கள் தூதரகத்தைத் தொடர்புகொள்வதற்கான அவசர தொலைபேசி இலக்கங்களையும் வெளியிட்டுள்ளது.
அவசர தொடர்பு இலக்கங்கள்:
- அவசர உதவி இலக்கம்: (+973) 3353 0290
- G.M.D. தரங்கிகா (இணைப்பாளர்): (+973) 3597 0290 / (+973) 3510 6301
- கோதமி (தொழிலாளர் பிரிவு எழுத்தர்): (+973) 3371 2875
பஹ்ரைனில் வசிக்கும் இலங்கையர்கள் உத்தியோகபூர்வ தகவல் வழிகள் ஊடாக நிலைமைகளைத் தொடர்ந்து அறிந்துகொள்ளுமாறும், அவசர நிலைமைகளின்போது இலங்கைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.










