காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஸ்மார்போர்ட் நேற்று வியாழக்கிழமை பாடசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.
சிறுவர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வு, காரைதீவு கண்ணகி வித்தியாலய அதிபர் திரு.உதயநாதன் தலைமையில் இடம்பெற்றது.
மாணவர்களின் நாளாந்த கற்றல் நடவடிக்கைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் ஊடாக, பாடசாலையில் சிறந்த கற்றல் சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த மார்போர்ட் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வசீர், காரைதீவு கோட்டக்கல்வி அதிகாரி ஏ. சஞ்சீவன் உள்ளிட்ட பிரதேச செயலக மற்றும் சமூக பிரதிநிதிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.










