-மன்னார் நிருபர்-
பாடசாலைகளுக்கு இடையிலான 2026 ஆம் ஆண்டுக்கான ரெக்வொண்டோ (TAEKWONDO) போட்டியில் கலந்து கொண்ட, மடு கல்வி வலயத்தை சேர்ந்த இரு மாணவர்கள், 2 ஆம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கங்களை தனதாக்கிக் கொண்டுள்ளனர்.
பண்டாரவளை உள்ளக விளையாட்டு மைதானத்தில், புதன்கிழமை இறுதி போட்டி இடம் பெற்றது.
இதன்போது 20 வயதிற்குட்பட்டோருக்கான 87 கிலோ எடை கொண்ட போட்டியில், பெரிய பண்டிவிரிச்சான் ம.வி பாடசாலை மாணவன் கு.டினோசன் சில்வா கலந்து கொண்டு 2 ஆம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
மேலும், 57 தொடக்கம் 62 கிலோ எடை கொண்ட போட்டியில், அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவி கே.எழிலரசி கலந்து கொண்டு 2 ஆம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.
குறித்த இரு மாணவர்களும் வெள்ளி பதக்கத்தை பெற்று மன்னார் மாவட்டத்திற்கும் வடமாகாணத்திற்கும் பெருமையை ஏற்படுத்தி உள்ளனர்.
குறித்த இரு மாணவர்களின் பயிற்றுவிப்பாளராக யோ.விஸ்னுகரன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.










