செனகல் நாட்டின் தலைநகரான டாக்காரில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்திய ஜூலி ஹோப் மற்றும் டரெக் பிளக் ஆகியோர் இலங்கை அணியை வழிநடத்தியுள்ளனர்.
ஒக்டோபர் 31ஆம் திகதி நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இலங்கை அணியும் கலந்துகொண்டதாக இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு (NOCSL) தெரிவித்துள்ளது.
இலங்கை அணியின் கொடி ஏந்திய வீரர்களாக இருவரும் தேசியக் கொடியை ஏந்திச் சென்றமை, இலங்கை அணிக்கு பெருமைமிக்க தருணமாக அமைந்துள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழு குறிப்பிட்டுள்ளது.
இது சர்வதேச விளையாட்டு நிகழ்வில் இலங்கையின் பங்கேற்பை ஆரம்பித்து வைக்கும் முக்கிய தருணமாகவும் அமைந்துள்ளது.
இலங்கையின் இளம் விளையாட்டு வீரர்கள் இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தயாராகி வருவதாகவும், சர்வதேச அரங்கில் தமது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தவுள்ளதாகவும் தேசிய ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.










