ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்க மற்றும் விடுவிக்க விரும்பும் வீரர்களின் பட்டியலைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை இரண்டு நாட்களுக்கு பிசிசிஐ நீட்டித்துள்ளது.
அதற்கமைய, நவம்பர் 17 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், திட்டமிட்டபடி டிசம்பர் 16 ஆம் திகதி கோவாவில் மினி ஏலம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அணிகள் தங்களது வீரர்களின் தக்கவைப்புப் பட்டியலைச் சமர்ப்பிக்க அசல் காலக்கெடு நவம்பர் 15 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து இடையேயான ஒருநாள் போட்டி நவம்பர் 15 அன்று நடைபெறுவதைக் கருத்திற்கொண்டு, அதனை நவம்பர் 17 வரை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
கோவாவில் டிசம்பர் 16 ஆம் திகதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அன்றைய தினம் இந்தியா – இலங்கை இடையேயான ஒருநாள் போட்டி பெங்களூரில் நடைபெற்றாலும், ஏலத் திகதியில் மாற்றமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்களின் பதிவு இன்று திங்கட்கிழமை தொடங்கியதுடன், நவம்பர் 23 வரை அது தொடரும்.
அணிகள் தங்கள் இறுதித் தெரிவுப் பட்டியலை டிசம்பர் 1 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இறுதியான ஏலப் பட்டியல் மற்றும் வீரர்களின் தொகுப்பு டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.










