கிழக்கு துருக்கியில் இன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக EMSC தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தின் தாக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய அதிர்வுகள் தொடர்பில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.









