தாய்லாந்தைச் சேர்ந்த 16 வயதான ரொக் பாடகியும் கிட்டார் கலைஞருமான நெனே ராயல்(Nene Royal), பிரபல அமெரிக்க திறமைக்காட்சி நிகழ்ச்சியான அமெரிக்காஸ் காட் டேலண்ட்(America’s Got Talent)-இன் 21ஆவது பருவத்தை வென்று வரலாறு படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் வரலாற்றில் வெற்றிபெற்ற முதல் தாய்லாந்து போட்டியாளராக அவர் பதிவாகியுள்ளார்.
புகெட்டில் பிறந்த Nene Royal-ன் இயற்பெயர் Rattikarn “Praew” Amloy (ரத்திகார்ன் “ப்ராவ்” அம்லாய்) ஆகும். ஏழு வயதில் கிட்டார் வாசிக்கத் தொடங்கிய அவர், பின்னர் உள்ளூர் இசை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் பங்கேற்று தனது இசைத்திறனை வளர்த்துக் கொண்டார். America’s Got Talent நிகழ்ச்சியின் ஆரம்ப சுற்றில் The Cranberries (தி கிரான்பெர்ரிஸ்) குழுவின் “ஜாம்பி(Zombie)” பாடலை ரொக் பாணியில் பாடி கவனம் பெற்ற அவர், தொடர்ந்து மியூஸ்(Muse)-ன் “ஹிஸ்டீரியா(Hysteria)” மற்றும் சவுண்ட்கார்டன்(Soundgarden)-ன் “பிளாக் ஹோல் சன்(Black Hole Sun)” ஆகிய பாடல்களையும் நிகழ்த்தினார்.
“பிளாக் ஹோல் சன்(Black Hole Sun)” பாடலின் நேரடி நிகழ்ச்சிக்குப் பின்னர் நீதிபதி மெல் பி(Mel B) வழங்கிய கோல்டன் பஸர்(Golden Buzzer) மூலம் நெனே ராயல்(Nene Royal) நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் தி வைட் ஸ்ட்ரைப்ஸ்(The White Stripes)-ன் “செவன் நேஷன் ஆர்மி(Seven Nation Army)” பாடலைப் பாடி கிட்டார் இசைத்த அவர், பின்னர் பிரபல ரொக் இசைக்குழுவான லிங்கின் பார்க்(Linkin Park) உடன் “தி எம்ப்டினெஸ் மெஷின்(The Emptiness Machine)” பாடலையும் மேடையில் நிகழ்த்தினார்.
பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட Nene Royal-க்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. அவரது வெற்றி தாய்லாந்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், உலகளாவிய இசை மேடையில் தாய்லாந்தைச் சேர்ந்த இளம் கலைஞர் ஒருவர் புதிய அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.










