கடந்த 8 மாதங்களில் உலகம் முழுவதும் ஒரு மில்லியன் இறப்புகள்
இந்த ஆண்டின் கடந்த 8 மாதங்களில் உலகம் முழுவதும் ஒரு மில்லியன் கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கடந்த இரண்டரை ஆண்டுகளில் 64 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவிக்கையில், உலக அளவில் குறைந்தபட்சம் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இதுவரை சில நாடுகளில் 40 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர், என தெரிவித்தார்.