கிரிஷ் (Krrish) பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இருவரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










