உலக நாடுகளில் எந்த நாட்டு மக்கள் அதிகளவில் மது குடிக்கின்றனர் என்பதற்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
உலகளவில் அதிக மது குடிக்கும் நாடுகளில் ரஷ்யா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த நாட்டு மக்கள் அதிகமாக மது குடிப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு நபர் ஆண்டுக்கு சுமார் 16.8 லிட்டர் மதுபானம் குடிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும் ஒட்கா அங்கு தேசிய பானமாக இருந்து வருகிறது. ஓட்கா குடிப்பது அவர்களது கலாச்சாரத்தில் ஒரு பங்காக உள்ளது. மேலும் பெரு நகரங்களில் பீர் விற்பனையும் அதிகளவில் இடம்பெறுமாம்.
அதிகம் மதுபானம் அருந்து நாடுகளில் இரண்டாம் இடத்தில் இருப்பது கிரீஸ் நாடு. இங்குள்ள தனிநபர் ஒருவர் ஆண்டுக்கு 14.5 லிட்டர் மதுபானம் குடிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிரீஸ் நாட்டில் மதுபானம் குடிப்பது அதன் பாரம்பரியாக இருக்கிறது. பொழுதுபோக்காக மது குடிப்பதை விட, கொண்டாட்டங்களுக்கு மது குடிப்பது இங்கு அதிகமாக காணப்படுகின்றது.