அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே உடனடியாகப் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் பிராந்தியத்தின் பதற்றத்தைக் குறைப்பதற்கும், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட ஒரு சாதகமான நடவடிக்கை என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச மற்றும் பிராந்தியப் பிரச்சினைகளுக்கு இராஜதந்திர ரீதியிலான அமைதியான தீர்வைக் காண்பதையே இலங்கை எப்போதும் ஆதரிக்கிறது எனத் தெரிவித்துள்ள அமைச்சு, இந்த அமைதி முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நீடிக்க வேண்டும் என்றும் தனது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது.










