பண்டாரவளை பூனாகலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தொழிலாளி பூனாகலை தோட்ட உதவி முகாமையாளரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தோட்ட பராமரிப்பாளராக பணிப்புரிந்து வந்து வந்த நிலையிலேயே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.