மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட, மகிளூர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 08 அடி நீளமான ராட்சத முதலை புகுந்துள்ளது.
வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து, வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியில் முதலையை மடக்கி பிடித்துள்ளனர்.
பின்னர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வாகனத்தினூடாக, வன ஜீவராசிகள் திணைக்களத்தினரின் உதவியுடன், பாதுகாப்பாக முதலை ஆற்றில் விடப்பட்டது.