யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய பகலகம பகுதியைச் சேர்ந்த நிரோஷன் லக்மால் (26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்ற நிலையில் விடுமுறை காலம் முடிவடைந்த பின்னரும், நீண்ட காலம் கடமைக்கு திரும்பாது இன்றைய தினம் வியாழக்கிழமை மீண்டும் கடமைக்கு திரும்பிய வேளை பலாலி இராணுவ தலைமையகத்திற்கு சென்று விளக்கம் கொடுக்குமாறு பணித்த நிலையில், சிப்பாய் பலாலியில் இருந்து வெளியேறிய நிலையில் அறியாளை நெளுக்குளம் பகுதியில், புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.