நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று வெள்ளிக்கிழமை இரண்டு முறை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று 391,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 9,000 ரூபாயால் குறைந்தது.
அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று 382,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக தங்கவிலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளது.
அதற்கமைய தற்போதைய சந்தை நிலவரங்களின்படி தங்கத்தின் புதிய விலை விபரங்கள் பின்வருமாறு:
24 கரட் தங்கம் (ஒரு பவுண்): 380,000 ரூபாய்
22 கரட் தங்கம் (ஒரு பவுண்): 349,600 ரூபாய்
கிராம் அடிப்படையிலான விலை விபரங்கள்:
24 கரட் தங்கம் (1 கிராம்): 47,500 ரூபாய்
22 கரட் தங்கம் (1 கிராம்): 43,700 ரூபாய்