இந்தியா-இங்கிலாந்து போட்டியில் மழை வருமா

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளாத இல்லையா என்பதை பார்போம்.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8வது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை அடிலெய்ட்டில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக போட்டிகள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதால் நாளை அடிலெய்ட்டில் 2வது அரையிறுதி போட்டியில் வானிலை நிலவரம் ரசிகர்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் இந்திய ரசிகர்கள் நாளை அடிலெய்டின் வானிலை நிலவரம் குறித்து இணையத்தில் தேடி வருகின்றனர். இந்த நிலையில் நாளைய போட்டியில் வானிலை எப்படி இருக்கும் என்பதையும் பார்போம். நாளை மழை பெய்யும் என்ற எந்த முன்னறிவிப்பும் இல்லாததால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகாலையில் மழை பெய்ய 24% வாய்ப்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் வானிலையால் ஆட்டம் பாதிக்கப்படாது, பிற்பகலில் சூரியன் இருக்கும் என்றும் மைதானம் முழுவதும் காற்றின் வேகம் இருக்கும்  என வானிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் நாளைய போட்டி அடிலெய்டில் மழை இல்லாமல் முழு அளவிலான கிரிக்கெட் போட்டி தொடரும் என்றே கூறப்படுகிறது.