பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (BCB) தேர்தலை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ செயல்முறை இன்று திங்கட்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த உறுப்பினர்களிடமிருந்து (councillors) பரிந்துரைகளை அனுப்புமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்துள்ளது.
பங்களாதேஷ் தேசிய அணியின் முன்னாள் அணித்தலைவர் டமிம் இக்பால், தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் இடைக்காலத் தலைவராகச் செயற்பட்டு வருகின்றார்.
அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமினுல் இஸ்லாம் தலைமையிலான நிர்வாகக் குழுவைக் கலைத்த தேசிய விளையாட்டு மன்றம் (NSC), 30 நாட்களுக்குள் அடுத்த தேர்தலை நடத்தும் பொறுப்பை டமிம் இக்பால் தலைமையிலான இடைக்காலக் குழுவிடம் வழங்கியுள்ளது.
இந்தநிலையில் தேர்தல் நடத்துவதற்காக 3 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 30 நாட்களுக்குள் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தேர்தலை நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.