பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நிறைவுக்கு வந்த இந்தப் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில், பங்களாதேஷ் அணியின் நாகித் ரானா 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
268 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 52.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடர்ந்து மூன்று போட்டிகளில் பங்களாதேஷ் வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரை 2-0 எனக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.