இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் பெண் குழந்தைக்கு தந்தையானதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய டி20 அணியின் தலைவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான சூர்யகுமார் யாதவ் – தேவிஷா ஷெட்டி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
35 வயதான சூர்யகுமார் 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமானார்.
மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா அணிகளுக்காக விளையாடியுள்ள இவர், 2021 ஆம் ஆண்டு இந்திய அணியில் தனது 31 வயதில் அறிமுகமானார்.
2024 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற போது பங்காற்றியிருந்த இவர் அதன்பின்னர், தலைவர் பொறுப்பை வகித்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றிருந்த நிலையில், மற்றொரு மகிழ்ச்சி சம்பவமாகவும், 2026 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்திருக்கிறது.