இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வீரர் சாய்ராஜ் பஹுதுலே (Sairaj Bahutule) நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், பஹுதுலேயின் பயிற்சியளிக்கும் திறமையை நம்பி அவரது பெயரை பிசிசிஐ-யிடம் (BCCI) பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.
ற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ள பஹுதுலே, இந்திய அணியில் இணைய அந்த அணியில் இருந்து விலகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
53 வயதான பஹுதுலே, இதற்கு முன்பு ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் சில தொடர்களில் இந்திய அணியுடன் பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக 2023 பார்டர்-கவாஸ்கர் கோப்பை மற்றும் இலங்கை சுற்றுப்பயணங்களின் போது அவர் அணியில் இடம்பெற்றிருந்தார்.
தற்போது இந்திய அணியில் மோர்னே மோர்கல் (வேகப்பந்து வீச்சு), சீதான்ஷு கோடக் (பேட்டிங்), டி. திலீப் (ஃபீல்டிங்) மற்றும் ரையான் டென் டோஸ்கேட் (உதவி பயிற்சியாளர்) ஆகியோர் உள்ளனர்.
சுழற்பந்து வீச்சுக்கு எனத் தனிப் பயிற்சியாளர் இல்லாத குறையை பஹுதுலே நிவர்த்தி செய்வார்.
இந்திய அணியின் அழைப்பு என்பதால், பஹுதுலே அணியிலிருந்து விலகுவதற்கு பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் முட்டுக்கட்டை போடாது என நம்பப்படுகிறது.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.