இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று புதன்கிழமை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 389,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், தற்பொழுது 3,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.