மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில், இன்று ஞாயிற்றுக்கிழமை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுவாஞ்சிக்குடி வடக்கை சேர்ந்த, காந்தன் என அழைக்கப்படும் காசிநாதன் ஜெயகாந்தன் (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த நபர் பச்சை மிளகாய் தோட்டத்தின் மத்தியில் உள்ள வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்படுவதாகவும், அவர் குழுவாக வந்த சிலரினால் அடித்து கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு களுவாஞ்சிக்குடி பொலிஸார் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர் வினோராஜ் உள்ளிட்டோர் சென்றுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.
