கண்டி–மாத்தளை பிரதான வீதியில், அக்குறணை குருகொட பகுதியில் இடம்பெற்ற பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய கோர விபத்தில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
குறித்த வீதியின் 7ஆவது மைல்கல் அருகே சிமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, பல வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களை மீட்பதற்கும் அவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விபத்து காரணமாக கண்டி–மாத்தளை பிரதான வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியூடான வாகனப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்றதற்கான காரணங்கள் உள்ளிட்ட மேலதிக விவரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.










