-யாழ் நிருபர்-
அகில இலங்கை நடனப் போட்டியில் மாகாண மட்டத்தில் வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதன்படி, போட்டியின் பல்வேறு பிரிவுகளில் பங்குபற்றிய கல்லூரி மாணவர்கள் நான்கு இடங்களைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
அந்தவகையில் தனி நடனம் – முதலாம் இடம்
குழு நடனம் – இரண்டாம் இடம்
வயலின் இசை – இரண்டாம் இடம்
தனி இசை – இரண்டாம் இடம் என பெற்றுள்ளனர்.
மாகாண மட்டத்தில் கலைத்துறையில் மாணவர்கள் வெளிப்படுத்தியுள்ள இந்தச் சிறப்பான திறமை, கல்லூரியின் கலைசார் வளர்ச்சியையும் மாணவர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.










