கண்டி–மாத்தளை பிரதான வீதியில், அக்குறணை பகுதியில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், குறித்த வீதியூடான வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் எவரேனும் காயமடைந்துள்ளனரா அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
எனவே, குறித்த பகுதியூடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் போக்குவரத்து தாமதங்களை எதிர்பார்த்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.










