நியூசிலாந்துடனான ஒருநாள் 20 க்கு 20

நியூசிலாந்துடனான ஒருநாள் 20 க்கு 20நியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் 20 க்கு 20 தொடருக்கு தாம் தயாராக இருப்பதாக இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் தசுன் ஷனக தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை சனிகிழமை நடைபெறுகிறது.

இது குறித்து ஷானக கூறுகையில், “நாங்கள் நன்கு தயாராக உள்ளோம். அஞ்சலோ மேத்யூஸ் அணியில் இணைந்தது நல்ல விஷயம். இளம் வீரர்கள் அவரிடமிருந்து அறிவைப் பெற முடியும்.

உலகக் கோப்பைக்கு தகுதி பெற இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம். நியூசிலாந்து அணி சிறந்த நிலையில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்” என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்