Sri Lanka Tamil News Site

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி

- Advertisement -

இறுதிப் போட்டிக்கு இன்று இங்கிலாந்து அணி முன்னேறியது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 பந்துகள் கொண்ட உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இன்று இங்கிலாந்து அணி முன்னேறியது. அரையிறுதியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஜோடி எந்த விக்கெட்டுக்களையும் இழக்காமல் வெற்றிக்குத் தேவையான ஓட்டங்களை எட்டியது.

- Advertisement -

இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பாவம் பார்க்காமல் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 86 ஓட்டங்கள் எடுத்தார்.

ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் 4 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி

- Advertisement -