தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று முன்னெடுத்த தீவிர ஆலோசனைகளைத் தொடர்ந்து, தற்போது தமது ஆதரவை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கான ஆதரவுக் கடிதம் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது.
ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏனைய கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வெளியிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்துஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு ஆதரவு வழங்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை விஜய் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் ஆட்சியமைப்பது உறுதியாகும்.
கணக்கீட்டின்படி 118 இடங்களை அடைய இன்னும் 4 பேரின் ஆதரவே தேவைப்படுகின்றது