திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் சமயங்கின் நெருங்கிய சகாவான’கைவாரு முத்து எனப்படும் மனோஜ் முத்துகுமார கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் டுபாயின் ஷார்ஜாவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அல்டோ தர்மேவின் சகோதரி, 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான போதைப்பொருள் பணத்தைப் புழக்கத்தில் விட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
46 வயதுடைய சந்தேகநபர், பிலியந்தலை – மடபாத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.










