மறைந்த பிரபல மக்கள் அபிமான பாடகர் நிஹால் நெல்சன் அவர்களின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இறுதி அஞ்சலி செலுத்தினார்.
- Advertisement -
இலக்கம் 17 நிஹால் நெல்சன் மாவத்தை ராவனாவத்த மொரட்டுவ இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மறைந்த பிரபல மக்கள் அபிமான பாடகர் நிஹால் நெல்சன் அவர்களின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை காலை சமூகமளித்தார்.
நிஹால் நெல்சன் அவர்கள் இலங்கையின் இசைத்துறையில் பாடகராகவும், பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளதோடு, 113 பாடல் ஆல்பங்களை உருவாக்கி, இலங்கை பாடகர் ஒருவரால் அதிக பாடல் ஆல்பங்களை பதிவு செய்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.
- Advertisement -