மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவர், இன்று வியாழக்கிழமை தப்பி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொறக்கட்டாஞ்சேனை-தேவபுரம் காளிகோவில் வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர், மற்றொரு நபருடன் சண்டையிட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவருக்கு நீதிமன்றம் 3 மாதகாலம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது
அதன்படி குறித்த நபர் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவ தினமான இன்று காலை, சிறைச்சாலைக்கு வெளியில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் என தெரிய வருகின்றது.
தப்பி ஒடி தலைமறைவாகியுள்ள சிறைக் கைதியை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.