கிழக்கு மாகாண சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று உதவி கூட்டுறவு ஆணையாளர் அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் நான்கு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரிகளுக்கு நேர் முகப்பரீட்சை நடத்தப்பட்டு நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நேற்று திங்கட்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் பி. வாகீசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் பி.தனேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.