-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை கிண்ணியா வலய கல்வி பிரிவுக்குட்பட்ட, முள்ளிபொத்தானை கோட்ட கல்வி பிரிவின் அரபா நகர் தி/கிண்/அல்ஹிக்மா முஸ்லிம் வித்யாலத்துக்கான, புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ன சேகர மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர்கள் கலந்து கொண்டு, அடிக்கல்லை நட்டு வைத்தனர்.
சுமார் 11மில்லியன் ரூபா செலவில் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரஜா சக்தி தலைவர், உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட, மாகாண கல்வி பணிப்பாளர், கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளர், உதவி கல்வி பணிப்பாளர், முள்ளி பொத்தானை கோட்டக்கல்வி பணிப்பாளர், அதிபர், ஆசிரியர்கள், பிள்ளைகளுடைய பெற்றோர்களும் பலரும் என கலந்து சிறப்பித்தனர்.



