மூதூர் வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட சம்பூர் மகா வித்தியாலய மாணவர்களின் நீண்டகாலத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய இரு மாடி வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
முதலாவது மாடிக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, அடுத்த மாடி கட்டிடத்திற்கு இரண்டாம் கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் அடிக்கலை நாட்டி வைத்தனர்.
பாடசாலை அதிபர் புண்ணியமூர்த்தி பிரபாகரன் தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எஸ். ஆர். ஹசந்தி ( Hasanthi), மூதூர் வலய கல்விப் பணிப்பாளர் எ.எல்.சிராஜ், மூதூர் வலயக்கல்வி அலுவலகப் பிரதி கல்வி பணிப்பாளர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் (மூதூர் பிரதேச இணைப்பாளர் எம்.ஆர்.எம். சப்ரான் மற்றும் பிரஜா சக்தி தலைவர்கள் என பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த புதிய கட்டிட வசதி மூலம் சம்பூர் மகா வித்தியாலய மகா வித்தியாலய மாணவர்களின் கற்றல் சூழல் மேம்படுவதுடன், பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.