பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவு தோட்டப் பகுதியில், தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஐந்து பெண் தொழிலாளர்கள், குளவி கொட்டுக்கு இலக்காகி, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேயிலை மழையில் குறித்த தோட்ட தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த போது, தேயிலை மரத்தில் அடியில் இருந்து குளவி கூடு கலைந்து குளவிகள் தாக்கியதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களின் நிலை ஆபத்தாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
