யாழ். சுழிபுரம் விக்கி கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று புதன்கிழமை கல்லூரியின் பொது மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் அரசியல் விஞ்ஞான ஆசிரியர் திருமதி தாரணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
விருந்தினர்கள் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டு, மங்கள விளக்கேற்றி, இறை வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் சபாநாயகர் மன்றுக்கு அழைத்து வரப்பட்டார்.
- Advertisement -
பிரதமர் மற்றும் அமைச்சுக்களின் உரைகளும் வாதப் பிரதிவாதங்களும் பாராளுமன்ற கன்னி அமர்வில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து விருந்தினர்களின் உரை நடைபெற்றது. பின்னர் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
இந்த நிகழ்வில் கல்லூரியின் அதிபர்இ ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
- Advertisement -